Perambalur: 4 goats died after being bitten by dogs! District administration action request!
பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே உள்ள திருவளக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த மூக்கன் மகன் மணிவேல் (60). இவரது விவசாய நிலத்தில், ஆடுகளை பட்டியில் கட்டி வைத்திருந்தார். இன்று பார்த்தபோது அங்கு வந்த நாய்கள் 4 ஆடுகளை கடித்து கொன்று விட்டு தப்பி ஓடிவிட்டது.
இதுகுறித்த தகவலின் பேரில் பாடாலூர் கால்நடை மருத்துவமனை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து உடற்கூறு ஆய்வு செய்தனர். பின்னர் ஆடுகளை குழிதோண்டி புதைத்தனர். பாடாலூர் ஊராட்சி நிர்வாகம் நாய்களை கட்டுப்படுத்த போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து கட்டுப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.