Perambalur: 4 injured in car accident; people looted liquor bottles without rescuing the injured!
பெரம்பலூர் அருகே இன்று காலை, சாலை தடுப்புக் கட்டையில் மோதி விபத்துக்குள்ளான காருக்குள் காயமடைந்து கிடந்தவர்களை மீட்காமல் அங்கிருந்த பொதுமக்கள் காரினுள் இருந்த புதுச்சேரி மது பாட்டில்களை அள்ளி சென்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம், பேரையூர் அருகே உள்ள திருமயத்தை சேர்ந்தவர்கள் ராஜா மருதப்பாண்டி, சுரேஷ், ரமேஷ். நண்பர்கள் 4 பேரும், சொந்தமாக தொழில் செய்து வருகின்றனர். விடுமுறையை கழிப்பதற்காக, புதுச்சேரி சென்று விட்டு, மதுரைக்கு இன்று காலை காரில் சென்றுக் கொண்டிருந்தனர். காரில், நண்பர்களுக்கு மது விருந்து வைப்பதற்காக, சுமார் 30 மேற்பட்ட பல வகையான மது பாட்டில்களை காரில் எடுத்து சென்றனர். காரை மருதுப்பாண்டி ஓட்டி சென்றார். கார் இன்று காலை சுமார் 8 மணி அளவில், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், இரூர் அருகே சென்றுக் கொண்டிருந்த போது சாலையில் இருந்த தடுப்புக் கட்டையில் மோதி விபத்திற்குள்ளானது. காரில் வந்த 4 பேரும் காயமடைந்தனர். கார் விபத்துக்குள்ளனதை அறிந்த அப்பகுதி மக்கள் அவர்களை மீட்க சென்ற போது காரில் இருந்தவர்கள் நல்ல மது போதையில் இருந்தது தெரிய வந்ததால், அவர்களை மீட்கும் பணியை கைவிட்டு காரில் கிடந்த மதுப்பாட்டில்கள் எடுத்து சென்றனர்.
இது குறித்து தகவலறிந்து வந்த பாடாலூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் அவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். போதையால் பாதை மாறி மருத்துவனையில் சிகிச்சை பெற்று வரும் இளைஞர்களுக்கு அங்கிருந்தவர்கள் பலர் புத்திமதி கூறினர். மேலும், போதை இளைஞர்கள் காரில் சென்ற போது அதிர்ஷ்டவசமாக எவ்வித அசாம்பாவிதம் நடக்கவில்லை. இதனால் சாலையில் சென்றவர்களின் உயிர் காப்பாற்றபட்டது. போதையில் கார் ஓட்டிய இளைஞர்களை காவல்துறையினர் கடுமையாக தண்டிப்பதுடன் அதிக பட்ச அபராதமும் விதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.