Perambalur: 4 people arrested for selling lottery and Kerala online lottery tickets banned by the government!
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும் போலீஸ் எஸ்.பி ஆதர்ஷ் பசேரா உத்தரவின்படி அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்பவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
பெரம்பலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின் படி தனிப்படையின் சோதனை நடத்திய போது, பெரம்பலூர் பழைய பேருந்து நிலைய வாட்டர் டேங்க் அருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றுக் கொண்டிருந்த எசனையை சேர்ந்த ஆரோக்கிய சாமி மகன் மரியதாஸ் (42), என்பவரை கைது செய்து அவரிடமிருந்து நல்ல நேரம் லாட்டரி சீட்டு-4, தங்கம் லாட்டரி சீட்டு-4, குமரன் லாட்டரி சீட்டு-4, விஷ்ணு லாட்டரி சீட்டு-3, ஆகியவை பறிமுதல் செய்து, பெரம்பலூர் போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் கைது செய்து நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறைக்கு அனுப்பி வைத்தனர்.
வாலிகண்டபுரம் ஊராட்சி அலுவலகம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றுக் கொண்டிருந்த ) பெரம்பலூர், அய்யப்பன் கோவில் எதிர்புறம், சின்ன தெற்கு தெருவை சேர்ந்த அங்குசாமி மகன் மாது (மருதமணி) (39) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய பயன்படுத்திய ஆப்பிள் செல்போனை பறிமுதல் செய்து மங்களமேடு போலீசில் ஒப்படைத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார்.
அகரம் சீகூர் வெள்ளாற்று பாலத்தின் அருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றுக் கொண்டிருந்த வசிஸ்டபுரம் அருகே உள்ள ரெட்டிக்குடிக்காடடை சேர்ந்த ராமசாமி (69) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து ரூ.500 மதிப்புள்ள ஆன்லைன் லாட்டரிகள் பறிமுதல் செய்து மங்களமேடு போலீசில் ஒப்படைத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார்.
மேட்டுப் பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றுக் கொண்டிருந்த நெய்குப்பை காலனி தெருவை சேர்ந்த சுந்தரம் மகன் அசோக்குமார், என்பவரை கைது செய்து அவரிடமிருந்து WIN WIN கேரளா லாட்டரிகள் -10 மற்றும் ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய பயன்படுத்திய இரண்டு செல்போன்களை பறிமுதல் செய்து வ.களத்தூர் ஒப்படைத்தனர். வ.களத்தூர் போலீசில் ஒப்படைத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார்.
அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். அத்தகைய செயலில் ஈடுபடும் நபர்கள் குறித்த தகவல் தெரிந்தால் அருகில் உள்ள காவல்நிலையத்திற்கோ அல்லது மாவட்ட காவல் அலுவலகத்திற்கோ தகவல் தெரிவிக்கலாம் தகவல் அளிக்கும் நபர்களின் விவரங்கள் இரகசியம் காக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.