Perambalur: 4 years in prison and a fine of Rs 4,000 for a person who cheated by promising to get a job! Court verdict!
கடந்த 2012 –ம் ஆண்டு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 6,00,000 /- ரூபாயை ஏமாற்றிய நபருக்கு 4 வருடம் கடுங்காவல் சிறைதண்டனை மற்றும் 4000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கிய பெரம்பலூர் மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றம்.
பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் கிராமம், மாரியம்மன் கோவில் தெருவைச் சேரந்தவர் குழந்தை (65), இவரது மகனுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி சிறுவாச்சூர் கிராமத்தை சேர்ந்த பொன்னுசாமி மகன் செந்தில்முருகன் (45) என்பவர் ரூ. 6 லட்சத்தை பெற்றுக் கொண்டு வேலை வாங்கித் தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.
இது குறித்து பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவில் குழந்தை அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த 2012 –ம் ஆண்டு மேற்படி செந்தில் முருகன் மீது 964/2012 U/s 419,420,465,467,468,471,506(i) IPC –ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் மேற்படி வழக்கின் விசாரணை முடித்து குற்ற இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கானது நீதிமன்ற விசாரணையில் இருந்து வந்த நிலையில் இன்று வழக்கை விசாரித்த பெரம்பலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம், செந்தில் முருகன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 4 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் மற்றம் ரூ. 4 ஆயிரம் அபராதத்தை விதித்து தீர்ப்பளித்தார்.
வழக்கில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்த மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் மற்றும் குற்றப்பிரிவு நீதிமன்ற பெண் தலைமைக் காவலர் ரீத்தல் ஆகியோர்களை போலீஸ் எஸ்.பி ஆதர்ஷ் பசேரா பாராட்டினார்.