Perambalur: 5 days of in-service training for science teachers; held at Veppandhattai Government College.

தமிழ்நாடு மாநில அறிவியல் தொழில்நுட்ப மன்றம், வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயற்பியல் துறை சார்பில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி அறிவியல் ஆசிரியர்கள் 50 பேருக்கு கடந்த ஜன.20 முதல்
5 நாட்கள் அறிவியலில் தோன்றியுள்ள புதிய தொழில்நுட்பங்களை விளக்கும் வகையில் பணியிடைப் பயிற்சி கல்லூரியின் முதல்வர் (பொ) து .சேகர் தலைமையில் நடந்தது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் தேவநாதன், பாரதிதாசன் பல்கலைக்கழக உயிர் தகவல் இயல் துறையின் துறை தலைவர் செல்லபாண்டி, சென்னை சவீதா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் அண்ட் டெக்னிக்கல் சயின்ஸ் பேராசிரியர் செந்தில் கண்ணன் பலர் கலந்து கொண்டனர்.

பயிற்சியில் பங்கேற்ற அறிவியல் ஆசிரியர்களுக்கு புத்தாக்கம் பெறும் வகையில், பல்துறையை சேர்ந்த பேராசிரியர்கள், இசை ,யோகா பயிற்றுநர்கள் ஆசிரியர்களுக்கு தேவையான உளவியல் சார்ந்த சிக்கல்களை போக்குவது குறித்த வகுப்புகளை நடத்தினர். பயிற்சியின் நடுவே வேப்பந்தட்டையில் உள்ள பருத்தி ஆராய்ச்சி நிலையத்திற்கு களப்பயணமாக சென்றனர். அறிவியல் ஆசிரியர்களுக்கு பயிற்சி கையேடும், பயிற்சி சான்றிதழும் வழங்கப்பட்டது. இயற்பியல் துறையின் பேராசிரியர் ராசாத்தி விழாவை தொகுத்து வழங்கினார். முன்னதாக, கணினி அறிவியல் துறை தலைவர் சகாயராஜ் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளரும், இயற்பியல் துறை தலைவருமான பாஸ்கரன் நன்றி கூறினார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!