Perambalur: 5 years imprisonment for POCSO case Rs.50 thousand fine! Mahila Court order!
பெரம்பலூரில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு மகிளா நீதிமன்றம், 5 ஆண்டு சிறை தண்டனை, 50 ஆயிரம் அபாரதம் விதித்து தீர்ப்பு வழங்கியது.
பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கடந்த 2020-ம் ஆண்டு சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாக கொடுத்த புகாரின் பேரில் லாடபுரம் கிராமத்தை சேர்ந்த சிதம்பரம் மகன் நடேசன் (35) மீது, பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கின் விசாரணை முடித்து குற்ற இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கில் இன்று குற்றம் நிரூபிக்கப்பட்டதால், இவ்வழக்கின் குற்றவாளியான நடசேனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையுடன் ரூ. 50 ஆயிரத்தை அபராதமாக விதித்து மகிளா நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு அளித்தார். அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். பின்னர், போலீசார், நடசேனை சிறையில் அடைத்தனர்.