Perambalur: 6 accused in the beating case sentenced to 14 months in prison and fined; Court verdict!
பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த ரெங்கநாதன் மகன் சண்முகம் என்பவரை, அதே ஊரைச் சேர்ந்த சின்னசாமி மகன் ஆறுமுகம் (62) ரவி மகன் ராஜேஷ் (32) சிவசாமி மகன் குமார் (47), மாயக்கிருஷ்ணன் மகன் கோவிந்தராஜ் (52), முத்து மகன் நாட்டார் @ ராஜீ (55), மாரிமுத்து மகன் ஆதிமூலம் (32) ஆகியோர்கள் தாக்கியதாக 2015 ஆம் ஆண்டு கொடுத்த புகாரின் அடிப்படையில் அரும்பாவூர் போலீசார் குற்ற எண் 214/2015 U/s 147,294(b),323,506(ii) IPC r/w 3(1)(r) SC/ST Act ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்து எதிரிகள் 6 பேரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இவ்வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் குற்ற இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
நீதிமன்ற விசாரணையில் இன்று குற்றம் நிரூபிக்கப்பட்டதால் வழக்கின் குற்றவாளிகளான ஆறுமுகம், ராஜேஷ், குமார் கோவிந்தராஜ், நாட்டார் @ ராஜீ (55), ஆதிமூலம் ஆகியோர்களுக்கு ஒவ்வொரு நபருக்கும் தனித்தனியாக 294(b) IPC –ன் கீழ் 3 மாதம் சிறை ரூ.500 அபராதம், 341 IPC –ன் கீழ் 1 மாதம் ரூ.500ம், 323 IPC – 1 வருடம் ரூ.1000 அபராதம் என ஒவ்வொரு குற்றவாளிக்கும் தலா 14 மாதம் சிறை தண்டனை மற்றும் தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் 147, 323 IPC & 3(1)(r) SC/ST Act ஆகிய பிரிவுகளுக்கு Cr. PC 235(1) படி விடுதலை செய்தும், பெரம்பலூர் மாவட்ட எஸ்சி- எஸ்டி சிறப்பு நீதிமன்றத்தின் பொறுப்பு நீதிபதியான மகிளா நீதிமன்ற நீதிபதி இந்திராணி உத்தரவிட்டார். பின்னர், குற்றவாளிகள் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.