Perambalur: A boy who robbed bank notes was caught; police sent him to a special care home!
பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர்ந்து கோவில் உண்டியல்களில் திருட்டு நடந்து வந்தது. தனிப்படை போலீசார் பகல், இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
நேற்று பெரம்பலூர் போலீஸ் சப் – இன்ஸ்பெக்டர் ராம்குமார் பெரம்பலூர் சங்குபேட்டை பகுதியில் ரோந்து பணியில் இருந்த போது, அப்பகுதியில் உள்ள வெற்றி விநாயகர் கோவிலில் உட்புறத்தில் இளஞ்சிறார் ஒருவர் கையில் இரும்பு கம்பியுடன் இருந்ததை கண்டு அவரை பிடித்து விசாரணை செய்ததில், உண்டியலை திருட வந்துள்ளதாக ஒப்புக்கொண்டார். அந்த சிறுவனை போலீஸ் ஸ்டேசன் அழைத்து சென்று நடத்திய விசாரணையில், இவர் தொடர்ச்சியாக இதே போன்று பல கோவில் உண்டியல்கள் திருட்டில் ஈடுப்பட்டு வந்தது. வழக்கு பதிவு செய்த போலீசார் அவனிடமிருந்து ரூ. 7,400/- பணம் மற்றும் இரும்பு கம்பியும் பறிமுதல் செய்த போலீசார், அந்த சிறுவனை திருச்சியில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர்.