Perambalur: A car collided with a broken-down van: a woman died! 4 people injured!!
பெரம்பலூர் அருகே இன்று பழுதாகி சாலையில் நின்றுக் கொண்டிருந்த வேன் மீது, கார் மோதிய விபத்தில் திருநெல்வேலியை சேர்ந்த பெண் ஒருவர் பலியானர். 4 பேர் காயமடைந்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் அருகே உள்ள சிவஞானபுரத்தை சேர்ந்த ஞானமணி மகன் சதீஷ்துரை (36), அவரது தாயார் செல்லத்தாய் (60), மற்றும் அவரது குழந்தைகள் சாரணி (11), லட்சித் (7), மற்றும் தாங்கேஸ்வரி (45), ஆகியோர் சென்னையில் இருந்து திருநெல்வேலி நோக்கி Celerio கார் ஒன்றில் சென்றுக் கொண்டிருந்தனர். கார் , திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் 4 ரோடு மேம்பாலம் அருகே சென்ற போது, அங்கே சென்னையில் இருந்து திருச்சிக்கு பேட்டரி ஏற்றி சென்ற Eicher வேன் பழுதாகி நின்றுக் கொண்டிருந்தது. அதன் பின்னால் சதீஷ்துரை ஓட்டி வந்த கார் எதிர்பாரத விதமாக பலத்த சத்தத்துடன் மோதி விபத்திற்குள்ளானது. இதில், காரில் வந்த செல்லத்தாய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் விபத்து மற்றும் தீயணைப்பு மீட்பு படையினர், பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.