Perambalur: A car collided with a lorry ahead; One victim! Two injured!!
பெரம்பலூர் அருகே உள்ள வாலிகண்டபுரம் மேம்பாலத்தில், முன்னே சென்ற லாரி மீது, கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இருவர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்தவர் வசந்த் (33), இவரது மனைவி பரிமளா (28), மகன் ஜெயவர்மன் (6), ஆகியோர் காரில் சென்னையில் இருந்து திருச்சியை நோக்கி சென்று கொண்டிருந்தனர். காரை வசந்த் ஓட்டி வந்தார். கார், NH 38 திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரம் மேம்பாலம் அருகே சென்றுக் கொண்டிருந்தபோது, முன்னால், சென்னையில் இருந்து மதுரையை நோக்கி சென்றுக் கொண்டிருந்த கூரியர் லாரி மீது, பின்னால் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரை ஓட்டி வந்த, வசந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த பரிமளா, ஜெயவர்மன் ஆகியோரை அங்கிருந்தவர் ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த மங்களமேடு போலீசார், லாரி டிரைவரான ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள கூடகுளம் மாரிமுத்து மகன் பாலாஜி (24), என்பவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.