Perambalur: A case has been registered against 4 people who shot a video of assaulting a teenager; One arrested!

பெரம்பலூர் அருகே உள்ள மேலப்புலியூர் அருகே உள்ள நாவலூரை சேர்ந்தவர் தர்மராஜன் (70), இவது மகன் வெங்கடேசன் (25). சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இவரை, அதே ஊரைச் சேர்ந்த 4 வாலிபர்கள் மதுபோதையில் வெங்கடேசனை கடந்த ஜுன்.20ம் தேதி லாடபுரம் செல்லும் வழியில் மயிலூற்று கோனேரி ஆற்றில் கை மற்றும் குச்சிகளால் தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது.

இது குறித்து வெங்கடேசனின் தந்தை தர்மராஜ் கொடுத்த புகாரின் பேரில், 504/24 U/S 294(b),323,324,331,506(ii) IPC பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் போலீசார், நாவலூரை சேர்ந்த ஜோதிவேல் மகன் முருகவேல் (27), மணிராஜ் மகன் ரஞ்சித் (30), கருணாகரன் மகன் அருண் (27), வேலாயுதம் மகன் நிகாஷ் (27) ஆகிய 4 வாலிபர்கள் மீது, வழக்குப் பதிவு செய்த போலீசார், முருகவேலை கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறைக்கு அனுப்பி வைத்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!