Perambalur: A company that does not fix the air cooler fault, charges the customer Rs. 20,000 ordered by the consumer court!
பெரம்பலூர் அருகே உள்ள மேலப்புலியூரை சேர்ந்தவர் சின்னத்தம்பி மகன் சுந்தரபாண்டியன், கடந்த 02-04-2023 அன்று பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள டார்லிங் நிறுவனத்தில், கென் ஸ்டார் ஏர் கூலர் வாங்கி உள்ளார். அது 05-04-2023 அன்று பழுதாகி விட்டது. இது குறித்து, சுந்தரபாண்டியன் வாடிக்கையாளர் சேவை மையத்தில் தொடர்பு கொண்டுள்ளானர். ஆனால், பழுது நீக்க உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்க வில்லை. பின்னர் வழக்கறிஞர் பாண்டியன் மூலம் பெரம்பலூர் நுகர்வோர் குறைத்தீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு ஆணையத்தின் தலைவர் ஜவஹர், உறுப்பினர்கள் திலகா, முத்துராமன் ஆகியோரை கொண்ட அமர்வு விசாரணைக்கு வந்தது.
வழக்கு விசாரணையின் முடிவில், வாடிக்கையாளர்க்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு, சேவை குறைபாட்டிற்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடாக வழங்கவும், 45 நாட்களுக்குள் வழங்க வேண்டும், தவறும் பட்சத்தில் 9 சதவீத வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டம் என உத்திரவிட்டது.