Perambalur: A consultative meeting of “Orani Tamil Nadu” local level agents and local level digital agents was held under the chairmanship of District DMK in-charge V. Jagatheesan.

பெரம்பலூர் மாவட்டம், “ஓரணியில் தமிழ்நாடு ” பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி பாக நிலை முகவர்கள், பாக நிலை டிஜிட்டல் முகவர்கள் (BLA-2, BDA) ஆகியோருக்கு டிஜிட்டல் முறையில் உறுப்பினர்கள் சேர்த்தல் செயல்படுவது குறித்து ஆலோசனைக் கூட்டம் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் தலைமையில் கர்ணம் சுப்பிரமணியம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் தகவல் தொழில் நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் பா.கேசவன் கலந்து கொண்டு டிஜிட்டல் முறையில் உறுப்பினர்கள் சேர்த்தல் குறித்து விளக்கி பேசினார். இதில் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் தங்க.சித்தார்த்தன், பொதுக்குழு உறுப்பினர்கள் செ.அண்ணாதுரை, ராமச்சந்திரன், மாவட்ட பொருளாளர் செ.ரவிச்சந்திரன், பெரம்பலூர்
ஒன்றிய கழகச் செயலாளர் எம்.ராஜ்குமார், வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் செ.நல்லதம்பி, வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் ந.ஜெகதீஷ்வரன், ஆலத்தூர் மேற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் டாக்டர் செ.வல்லபன்,

மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஆதவன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ரமேஷ் ராஜேந்திரன், பேரூர் செயலாளர்கள் அரும்பாவூர் ஆர்.ரவிச்சந்திரன்,குரும்பலூர் எம்.வெங்கடேசன், பூலாம்பாடி செல்வலெட்சுமி சேகர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!