Perambalur: A fight that started with an argument between a financial company and a customer who went to collect a debt ended in a knife attack!

பெரம்பலூர் மாவட்டம், தேனூர் அருகே உள்ள தொட்டியப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னசாமி (70 ). இவர் கடந்த 2024 -ம் ஆண்டு திருச்சி மாவட்டம், துறையூரில் உள்ள தனியார் பைனான்ஸில் பைக் ஆர்சி புக்கை வைத்து ரூ 30,000 கடன் பெற்றுள்ளார். இதில் இரண்டு தவணை மட்டும் செலுத்தி உள்ளார். மீதி தவணைகள் நிலுவைகள் இருந்துள்ளது.

இந்நிலையில் பைனான்ஸ் ஊழியர்கள் கடந்த 18-ம் தேதி வசூல் செய்ய அவரது வீட்டிற்கு சென்ற போது பணம் இல்லை, பைக் எடுத்துட்டு போ என்று சின்னசாமி கூறி உள்ளார். அப்போது வாகனத்தை எடுத்த போது சின்னசாமி மகள் விஷ்ணுபிரியா (30) தடுத்து நிறுத்தி கட்டாய வசூல், அடாவடி வசூல் கூடாது என அரசு சட்டம் வகுத்துள்ளது. மேலும், அதிக வட்டி மட்டும் இல்லாமல், டாக்மெண்ட் சார்ஜ் என கூடுதலாக வாங்கி உள்ளீர்கள், நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளலாம் என தெரிவித்த நிலையில்,

பைனான்ஸ் ஊழியரான திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகா நட்டவாசு கிராமத்தைச் சேர்ந்த துரைசாமி மகன் ஆனந்த் (45) என்பவரை கல்லால் தாக்கியதில் தலையில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது,

இதை உடன் வந்த கரூர் மாவட்டம், குளித்தலையைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் வீரமணி (37). என்பவர் தடுத்துள்ளார். அங்கு ஓடி வந்த சின்னசாமி தன் மகளிடம் ஏதோ வம்பு இழுக்கிறார்களோ என நினைத்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வீரமணி வயிற்றுப் பகுதியில் குத்தினார். வீரமணிக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் பீறிட்டது, அங்கிருந்தவர்கள் அவரை திருச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்த புகாரின் பேரில், பாடாலூர் போலீசார் சம்பவ இடதிற்கு சென்று விசாரணை நடத்தி, தலைமறைவாக இருந்து சின்னசாமியை கைது செய்து நேற்று பெரம்பலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர்.

கட்டாய வசூல் கூடாது சட்டம் அமலில் இருக்கும் நிலையில், பைனான்சியர்கள் வீட்டிற்கு சென்று வசூலில் ஈடுபட்ட சம்பவத்தால் ஏற்பட்ட மோதலில் கத்தி குத்து வரை சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!