Perambalur: A legal awareness camp was held in Peelvadi village on the occasion of International Human Rights Day!
பெரம்பலூர் மாவட்டம், சித்தளி ஊராட்சிக்கு உட்பட்ட பீல்வாடி கிராமத்தில், உலக மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு, தேசிய சட்ட ஆணைக்குழு உத்தரவின் படி மூத்த வழக்கறிஞர் எஸ்.சிராஜ்தீன், வழக்கறிஞர்கள் எஸ். இனியவன் கே.என். ராமசாமி, கே.ராஜசேகர் ஈ.சத்தியமூர்த்தி மத்மூஸ் பாவா, சேகர் மற்றும் சட்ட தன்னார்வலர்கள் ஆசைத்தம்பி, நூர்ஜகான் ஆகியோர்கள் தேசிய ஊரக வேலை திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இலவச சட்ட ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு வழங்கினர்.
சிவில் வழக்குகள், குடும்ப நல வழக்குகள், காசோலைகள் தொடர்பான பிரச்சனைகள், மோட்டார் வாகன விபத்து வழங்குகளில் இழப்பீடு மற்றும் ஆலோசனைகளும், பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைகள் பற்றியும், ழிலாளர்களுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சனைகள் குறித்தும், வங்கி கடன் தொடர்பான வழக்குகளுக்கு சட்ட ஆலோசனையும், வழிக்காட்டுதலும் வழங்கினர். கிராமப்புற பகுதிகளில் நடைபெறும் சமூக சீர்கேடுகள் மனித உரிமைகள் இனம், நிறம், பாலினம், மதம் சமூக உயர்வு வேறுபாடுகளுமின்றி ஒவ்வொரு மனிதனும் வாழ்வதன் அவசியத்தையும் உணர்த்தி சட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டது.