Perambalur: A mineral water company was fined Rs. 2,000 for distributing drinking water without washing the cans properly!
பெரம்பலூர் அருகே உள்ள லாடபுரம் கிராமத்தில், தனியார் மினரல் வாட்டர் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. அந்த நிறுவனத்தில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு வினியோகம் செய்யப்பட்ட வாட்டர் கேன்கள் கழுவாமல், பச்சை கலரில் பாசிகளுடன் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது. இது குறித்து வாடிக்கையாளர்கள் FSSAI நிறுவனத்திற்கு புகார் அளித்தனர். அதன் பேரில் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் கேன்களை கழுவாமலேயே அழுக்கு மற்றும் பாசிகளுடன் தண்ணீர் கேன்களை இருந்ததை பார்த்த அதிகாரிகளை அதை விற்பதற்கு தடை விதித்து, தண்ணீரை கீழே கொட்ட செய்தனர். மேலும், அந்த தண்ணீர் சுத்திகரிப்பு செய்து விற்பனை செய்யும் நிறுவனத்திற்கு ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்ததுடன், இனி வரும் காலங்களில் தவறு நடந்தால். நிறுவனத்திற்கு பூட்டி சீல் வைக்கப்படும் எச்சரித்தனர்.
பொதுமக்கள் வாட்டர் கேன் வாங்கும் தண்ணீர் சுத்தமாக உள்ளதா என்றும், சமீபத்தில் தயாரிக்கப்பட்டதா என்றும் பார்த்து வாங்கி பருகும்படி தெரிவித்துள்ளனர். இதனால், தொண்டை பிரச்சனை, தலைவலி, தலைச்சுற்றல், உமட்டல் உள்ளிட்ட ஒவ்வாமைகளில் தப்பிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.