Perambalur: A new building for Arumbavur Town Panchayat worth Rs. 1.14 crore; MP Arun Nehru laid the foundation stone and inaugurated it!

பெரம்பலூர் மாவட்டத்தில், நேற்று அரும்பாவூர் பேரூராட்சிக்கு ரூ.1.14 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் உள்பட ரூ.1.38 கோடி மதிப்பிலான திட்ட பணிகளுக்கு பெரம்பலூர் எம்.பி அருண் நேரு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமை வகித்தார். பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன் முன்னிலை வகித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் வடக்கு மாதவி அரசு உயர்நிலைப் பள்ளி, வெங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி, வி.களத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் ரூ.7.85 லட்சம் வீதம் மாணவிகளுக்கான கழிவறை கட்டும் பணிகளையும், மூலதன மானிய நிதியின் மூலம் அரும்பாவூர் பேரூராட்சி அலுவலகத்திற்கு ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் புதிய அலுவலகக் கட்டடம் கட்டும் பணியையும் என மொத்தம் ரூ.1.38 கோடி மதிப்பீட்டில் 4 புதிய திட்டப் பணிகளை பெரம்பலூர் எம்.பி அருண் நேரு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, அரும்பாவூர் பேரூராட்சியில் மாநில நிதிக்குழு திட்டத்தில் ரூ.140.50 இலட்சம் மதிப்பீட்டில் அ.மேட்டூர் வார்டு எண்.15, விஜயபுரம் தார்சாலை மற்றும் வடிகால் அமைக்கும் பணிகளையும, மாரியம்மன் கோவில் தெருவில் தார்சாலை மற்றும் வடிகால் அமைக்கும் பணியையும், அரும்பாவூர் பெரியாண்டவர் கோவில் தெரு தார்சாலை மற்றும் வடிகால் அமைத்தல் உள்ளிட்ட பணிகைளையும் தெடங்கி வைத்தார்.

மாநில திமுக பொறியாளர் அணி பரமேஸ்குமார், பெரம்பலூர் யூனியன் சேர்மன் மீனா அண்ணாதுரை, மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், பேரூராட்சிகள் துறை உதவி இயக்குநர் த.காளியப்பன், அரும்பாவூர் பேரூராட்சி தலைவர் வள்ளியம்மை இரவிச்சந்திரன், துணைத் தலைவர் சரண்யா குமரன், பேரூராட்சி செயல் அலுவலர் க.தியாகராஜன், தொடக்க கல்வி அலுவலர் செல்வகுமார், தாசில்தார்கள் சரவணன் (பெரம்பலூர்), வேப்பந்தட்டை மாயகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் நல்லத்தம்பி, ஜெகதீஸ்வரன் மற்றும் மாவட்ட கவன்சிலர்கள் மகாதேவி ஜெயபால், தழுதாழை பாஸ்கர், திமுக பிரமுகர் அரும்பாவூர் ஆறுமுகம், சங்கர் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பல்வேறு அரசு அலுவலர்கள், அரும்பாவூர் பேரூர் வெங்கலம், வடக்குமாதவி, வ.களத்தூர் திமுக கிளை நிர்வாகிகள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!