Perambalur: A person involved in continuous gutka smuggling has been arrested under the Goondas Prevention of Crime Act!
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா, கள்ளச்சாராயம் உள்ளிட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்து, சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
குன்னம் தாலுகா வேப்பூர் அருகே உள்ளள ஓலைப்பாடி கிராமத்தை சேர்ந்த தங்கவேல் மகன் கரும்பாயிரம் (40), தொடர்ந்து தடை செய்யப்பட்ட போதை பொருட்களில் கடத்தலில் ஈடுபட்டு வந்ததால், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க, போலீஸ் எஸ்.பி ஆதர்ஷ் பசேரா, கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். பரிந்துரையை ஏற்ற கலெக்டர் கிரேஸ் பச்சாவ், குற்றவாளியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன் பேரில், கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். குண்டர் சட்டத்தில் கைது செய்ய சிறப்பாக பணிபுரிந்த குன்னம் போலீசாரை, எஸ்.பி ஆதர்ஷ் பசேரா பாராட்டினார்.