Perambalur: A.RaJa MP inaugurated a medical camp on the occasion of Deputy CM Udhayanidhi Stalin’s birthday!
பெரம்பலூரில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட திமுக மாணவரணி சார்பில், நடந்த இலவச மருத்துவ முகாமை, அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா.எம்.பி.,தொடங்கி வைத்தார். முகாமில் பொது மருத்துவம், கண் சிகிச்சை, அக்குபஞ்சர் சிகிச்சை, உள்ளங்கால் சிகிச்சை ஆகியவற்றிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சுமார் 200 பேர் கலந்து கொண்டனர். 45 பேருக்கு கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது.
மாவட்ட பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், எம்.எல்.ஏ பிரபாகரன், மாவட்ட ஊராட்சி சேர்மன் குன்னம் சி.இராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் எஸ்.அண்ணாதுரை, பட்டுச்செல்வி ராஜேந்திரன், அழகு.நீலமேகம், ஆர்.முருகேசன், மாவட்ட கழக துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர்,சன்.சம்பத், நூருல்ஹிதா இஸ்மாயில், ஒன்றிய கழகச் செயலாளர்கள் என்.கிருஷ்ணமூர்த்தி, எம்.ராஜ்குமார், எஸ்.நல்லதம்பி, தி.மதியழகன்,சி.ராஜேந்திரன், டாக்டர் செ.வல்லபன், ந.ஜெகதீஷ்வரன், ஒன்றிய பெருந்தலைவர்கள் க.ராமலிங்கம், பிரபா செல்லப்பிள்ளை, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஆதவன் , மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் வ.சுப்ரமணியன், அ.அப்துல்கரீம் மா.பிரபாகரன், டி.ஆர்.சிவசங்கர், ஆர்.அருண், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், பூலாம்பாடி பேரூர் செயலாளர் செல்வலட்சுமி சேகர், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தங்க.கமல், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர்கள் பா.ரினோபாஸ்டின், தமிழ்வேந்தன், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் எம்.மணிவாசகம், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.