Perambalur: A resolution was passed at the district hotels association meeting to stop using plastic bags!

பெரம்பலூர் மாவட்ட ஓட்டல்கள் சங்கத்தில் உள்ள உணவகம், தேனீரகம், அடுமனை, இனிப்பகம், தங்கும் விடுதியை சேர்ந்த உரிமையாளர்களின் ஆலோசனைக் கூட்டம் பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள கீதா ரெஸ்டாரண்ட் மாடியில் மாவட்டத் தலைவர் சிவகுமார் தலைமையில் நடந்தது. அதில், இனி வரும் நாட்களில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தப்போவதில்லை என்றும், முறையாக அரசின் உரிமம், அனுமதிகள் முறையாகப் பெற்று அவற்றை பின்பற்றுவது என்றும், ஆன்லைன் புக்கிங் மற்றும் டெலிவரியில் வர்த்தகத்தில் உள்ள இடர்பாடுகள், மற்றும் கமிஷன் தொகை குறித்தும் விவாதிக்கப்பட்டது, மேலும், உணவு பாதுகாப்பு துறையின் அறிவுறுத்தலின்படி அனைத்து செயல்பாடுகளும் நடத்துவது எனவும், தங்கள் நிறுவனங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் காவல் மற்றும் அரசுத்துறையினருக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்த மாவட்ட தலைவரும், கீதா ரெஸ்டாரண்ட் உரிமையாளருமான சிவக்குமார் இதனை தெரிவித்தார். அப்போது, மாவட்ட கவுரவத் தலைவரும், அஸ்வின் குழுமத்தின் நிறுவன தலைவர் கே.ஆர்.வி கணேசன், மாவட்டத் துணைத் தலைவர் கல்யாணி மெஸ் சி.சுந்தரம், பெரம்பலூர் நகரத் தலைவர் ஊட்டி காபி பார் என்.செல்லப்பிள்ளை, நகர செயலாளர் சாந்தி ரெஸ்டாரண்ட் ஆர். செல்வராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும், இந்த கூட்டத்தில், மாவட்ட பொருளாளர் உடையார் டீ ஸ்டால் பி.முத்துக்குமார், மாவட்ட பொருளாளர் வி.காசிவிஸ்வசநாதன், மாவட்ட கவுரவ ஆலோசர்கள் தம்பு காபி பார், ரெஸ்டாரண்ட் ஆர்.பாலாஜி, ஆரியாஸ் ஓட்டல் டி.ராமசுப்பு, கோபி பேக்கரி நாகராஜ், மாவட்ட துணைத் தலைவர் ஓட்டல் சரவணபவன் அருண்குமார், மாவட்ட இணைச் செயலாளர் நைல் ஐஸ்கீரீம் கொங்கு.சி.சிவக்குமார், மாவட்ட துணைச் செயலாளர்கள் ஆர்.கே. விஷ்ணுரோகன், சரஸ்வதி பேக்கரி ராஜேஷ், நகர பொருளாளர் ரெங்கா பால், ரெஸ்டாரண்ட் ஆர். மல்லப்பிள்ளை, பெரம்பலூர் நகர துணைத் தலைவர்கள் கொளஞ்சி ரெஸ்டாரண்ட் எம்.கொளஞ்சிவேல், அம்மா மெஸ் பழனியாண்டி, நகர துணைச் செயலாளர் எம்.அழகுதுரை, நகர துணைச்செயலாளர் எம்.கணேசன், சட்ட ஆலோசகர் வக்கீல் வள்ளலார் ஆர்.வேல்முருகன், மற்றும் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் ஆதிரை மார்ட் மதன்குமார், என் டி ஆர் மிக்சர் டி. ராமஜெயம் மனோ ஒரு டிபன் சென்டர் டி சக்திவேல் ராஜா ரெஸ்டாரண்ட் பாலமுருகன் பாலாஜி பவன் முருகவேல், மைசூர் பில்டர் காபி ஆர்.ரவீந்திரன், சித்ரா காபி பார் அருண், இஷ்டா ரெஸ்டாரண்ட் பாலாஜி, கார்த்திக், காபி 2.0 சிவக்குமார், ஆசிப் பிரியாணி ரகு, மோனிகா ஓட்டல் நீதிதேவன், கூரைக் கடை ஜெயராமன் மெஸ் ஆர். விஜயராஜா, சுவை பிரியாணி முகமது மீரான், அப்பா மெஸ் ராஜேந்திரன், நளபாகம் உரிமையாளர் வீ. முத்துவீரன், உள்ளிட்ட பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஹோட்டல் மற்றம், டீக்கடை, பேக்கரி, லாட்ஜ் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!