Perambalur: A resolution was passed at the Tamil Nadu Farmers’ Association district executive committee meeting to participate in the Salem Farmers’ Day rally in large numbers!

தமிழக விவசாயிகள் சங்க பெரம்பலூர் மாவட்ட செயற்குழுக் கூட்டம், மாநில செயலாளர் ஆர். ராஜாசிதம்பரம் தலைமையில், பெரம்பலூர் மாவட்ட தலைவர் வி.நீலகண்டன், பொருளாளர் ஏ. மணி ஆகியோர் முன்னிலையில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பூங்காவில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வருகின்ற ஜூலை 5 அன்று தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சேலத்தில் நடைபெற உள்ள உழவர் தின பேரணி மற்றும் பொதுக் கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தின் சார்பாக பெருந்திரளாக விவசாயிகள் கலந்து கொள்ள ஆலோசிக்கப்பட்டது. சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்து விவசாயிகளை அழைத்து செல்லவும் உத்தேசிக்கப்பட்டது. மேலும், மாநாட்டில் தீர்மானிக்க வேண்டிய விவசாயிகளின் கோரிக்கைகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது. வட்டார, கிராம அளவில் இது குறித்து விளம்பரப்படுத்தி பெருந்திரளாக விவசாயிகள் உழவர் தின பேரணியில் கலந்து கொள்ள நிர்வாகிகள் ஏற்பாடு செய்திடவும் தீர்மானிக்கப்பட்டது.
இக் கூட்டத்தில் சங்கத்தின் வட்டார பொறுப்பாளர்கள் M.S.ராஜேந்திரன், குணசேகர், சுந்தரராஜன், ராமராஜன், செல்லக்கருப்பு, நல்லுசாமி, அழகுமுத்து மற்றும் கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497