Perambalur: A resolution was passed in the Gokula Makkal Katchi meeting demanding the government to conduct a caste-wise census immediately!
பெரம்பலூரில், கோகுல மக்கள் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிராம நிர்வாகிகள் அறிமும் மற்றும் ஆலோசனைக் கூட்டம் பெரம்பலூர் அவைத் தலைவர் சி.சுந்தரம் தலைமையில் முத்துக்கோனார் திருமண மண்டபத்தில் நடந்தது. கருப்பையா, மற்றும் அன்பழகன், பெரம்பலூர் நகர அவைத் தலைவர் ராமராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சி நிறுவனரும், மாநில தலைவருமான சேகர், மாநில செயலாளரும், அம்மன் பேங்கர்ஸ் அண்ட் ரியல் எஸ்டேட் முத்தையா உட்பட பலர் சிறப்புரை ஆற்றினர்.
கூட்டத்தில், மத்திய மாநில அரசுகள், சாதிவாரி கணக்கெடுப்பு உடனடியாக நடத்தி வகுப்பு வாரி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், கால்நடை வளர்ப்போர் நலவாரியம் அமைக்க வேண்டும், மாதாந்திர முறையில் மின் கணக்கீடு செய்ய வேண்டும், பெரம்பலூர் முதல் ஆத்தூர் வரை நான்கு வழிச்சாலை பணியை துரிதமாக தொடங்கி முடிக்கவும்,
பெரம்பலூர் நகராட்சியை மாநகரட்சியாக தரம் உயர்த்த வேண்டும், பெரம்பலூர் புறநகர், துறைமங்கலம், 4 ரோடு சந்திப்பு அருகில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் எனவும், அரியலூரில் இருந்து பெரம்பலூர் துறையூர் தா.பேட்டை வழியாக நாமக்கல்லுக்கு புதிய ரயில் வழித்தடம் திட்டத்தை தொடங்கி செயல்படுத்த வேண்டியும், பெரம்பலூரில் நிலவும் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, பெரம்பலூர் நகருக்கு காவேரி ஆற்றில் இருந்து பிரத்தியோகமாக குடிநீர் வழங்கும் திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும்,
மழைக்காலங்களில் லாடபுரம் அருகே உள்ள பச்சைமலையில் இருந்து வரும் ஆணைகட்டி அருவியில் வெளியேறும் வெள்ள நீரை தேக்கிவைத்து பாசன வசதிக்காக பயன்படும் வகையில் புதிய தடுப்பனை கட்ட வேண்டியும்,
இரவு நேரங்களில் வெளியூர்களில் இருந்து வரும் பயணிகள் வசதிக்காக 4 ரோடு துறைமங்கலம் 3 ரோடு, பாலக்கரை புதிய பேருந்து நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையம் வரை இரவு நேர பேருந்துகள் இயக்க கோரியும்
பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில், பெரம்பலூர் மாவட்டத் தலைவர் ஜெயராமன், மாவட்ட துணை தலைவர்கள் பச்சமுத்து, செல்வராஜ், மாவட்ட செயலாளராக பிரபாகரன், மாவட்ட துணை செயலாளராக ராமர், ஜெயராமன், மாவட்ட பொருளாளராக ராஜமோகன், மாவட்ட அமைப்பு செயலாளர்கள் கோவிந்தராஜ், ராமசாமி, பெரியசாமி, வெங்கடேஷ், மாவட்ட விவசாய அணி செயலாளர் பாலசேகரன், இளைஞரணி செயலாளர் கோவிந்தசாமி, மகளிர் அணி இணை செயலாளர் அம்மு, துணை செயலாளர் மகேஸ்வரி, தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் திருவள்ளுவர், தொழிலாளர் அணி செயலாளர் மருதமுத்து மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாநில, மாவட்ட நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். பெரம்பலூர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் மல்லிகா அர்ச்சுனன் நன்றி கூறினார்.