Perambalur: A torrential downpour continued for 18 hours! People rejoice! Maize crops have started to bloom!
பெரம்பலூர் மாவட்டத்தில், பென்கால் புயலால் நேற்றிரவு சுமார் 7 மணிக்கு தொடங்கிய மழை, இன்று நண்பகல் சுமார் 2 மணி வரை விடாமல் பெய்தது. மற்ற மாவட்டங்களில் புயலாக இருந்தாலும், பெரம்பலூர் மாவட்டத்தில் புயல் மழை, பூ மழையாக அமைதியாக லேசான காற்றுடன் இடைவிடாமல் பெய்தது. மதியத்திற்கு பிறகு ஓய்வு கொடுத்த மீண்டும், மாலை 5.30 மணிக்கு தொடங்கியது. பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் கோடைவாசஸ்தலங்கள் போல், தட்பவெப்பநிலை குளு, குளுவென இருந்தது.
மின்சாரம் வினியோகம் சற்று நேரம் தடைப்பட்டாலும், மின்வாரிய ஊழியர்கள் உடனுக்குடன் சரி செய்து வினியோகம் செய்தனர்.
மலையாளப்பட்டி, அரும்பாவூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கிய நிலங்களில் இருந்த மக்காச்சோளப் பயிர்கள், காற்றை எதிர் கொள்ள முடியாமலும், பாராம் தாங்காலும், சாய்ந்தும், சாயவும் தொடங்கி உள்ளன. இதனால், மக்காச் சோளம் பயிரிட்ட விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
மாணவர்கள் கவலை!
நேற்று தொடர் மழை விடுமுறை நாளான இன்று பெய்கிறதே, நாளை பெய்தால் என்னவாம்? விடுமுறை கிடைக்குமே என மழையை சபித்தனர்.
இன்று பெரும்பாலும், விடுமுறை நாள் மக்கள் வீடுகளில் முடங்கினர். விவசாய பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த மழையை பயன்படுத்தி பல்வேறு கிராமங்களில் நெல் பயிரிட நஞ்சை ஓட்டும் பணியை மேற்கொண்டுள்ளனர்.
இன்று காலை 6 மணி வரை பெய்த மழையளவு விவரம் (மி.மீ-ல்): பெரம்பலூர் 47, எறையூர், 38, கிருஷ்ணாபுரம் 15, வி.களத்தூர் 37, தழுதாழை 47,வேப்பந்தட்டை 48, அகரம் சீகூர் 22, லப்பைக்குடிக்காடு 41, புதுவேட்டக்குடி 17, பாடாலூர் 29, செட்டிக்குளம் 34 என மொத்தம் 375 மி.மீ மழை பதிவானது. மாவட்டத்தின் சராசரி மழை அளவு 34.09 மில்லி மீட்டர் ஆகும்.