Perambalur: A young man who worked in a building dies mysteriously; Police investigate!
பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூரை சேர்ந்தவர் ஆசைத்தம்பி. இவர் அரசு பேருந்தில் டிரைவராக உள்ளார். இவரது மகன் தனுஷ் (வயது 21). 11ம் வகுப்பு படித்து விட்டு கட்டிட வேலை பார்த்து வந்தார். இன்று காலை வெங்கடேபுரத்தில் உள்ள தனியார் கட்டிடத்தில் கம்பி அறுக்கும் வேலை செய்து கொண்டிருந்த போது எதிர்பாரதவிதமாக மயங்கி விழுந்துள்ளார்.
அங்கிருந்தவர்கள் அவரை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். தனுசுக்கு, கிருத்திகா என்ற மனைவியும் உள்ளார். இது குறித்து தனுஷின் தந்தை அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் போலீசார், அரசு மருத்துவமனையில் தனுசின் உடலை உடற்கூறு ஆய்வு செய்தனர். மேலும், தனுஷ் மின்சாரம் தாக்கி உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என பல கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வாலிபர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.