Perambalur: A young woman affected by a mysterious disease: As there is no money for medical expenses, the family requests a helping hand!

பெரம்பலூர் அருகே உள்ள கவுல்பாளையம் கிராமம் காளியம்மன் நகரை சேர்ந்தவர்கள் சவுந்தர்ராஜன்- தனலட்சுமி தம்பதியினர். கல்லுடைக்கும் கூலித்தொழிலாளர்களான இவர்களுக்கு லதா, விஜயா, வேம்பு, சினேகா என நான்கு மகள்களும், மணிகண்டன் என ஒரு மகனும் உள்ளனர்.

முதல் மகள் லதாவிற்கும் இரண்டாவது மகள் விஜயாவிற்கும் ஏற்கனவே திருமணம் ஆன நிலையில், கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் மூன்றாவது மகள் வேம்புவை(25) அதே பகுதியைச் சேர்ந்த தர்மா என்கிற மணியரசு என்ற வாலிபர் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இதனிடையே கடந்த 8 மாதத்திற்கு முன்னர், திடீரென கழுத்துப் பகுதியில் வந்த சூட்டு கொப்பளத்தால் பாதிக்கப்பட்ட வேம்புவை அவரது பெற்றோர் வீட்டில் கணவர் விட்டு சென்றதாக தெரிகிறது. சூட்டு கொப்பளம் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த வேம்புவை அவரது பெற்றோர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். கழுத்தில் பக்கவாட்டுப் பகுதியில் இருந்த சூட்டு கொப்பளம் நாளடைவில் பெரிதாகி கொண்டே இருந்ததால், அதனை குணப்படுத்த முடியாத மருத்துவர்கள் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு செல்லுமாறு பரிந்துரைத்துள்ளனர்.

அதனை தொடர்ந்து வேம்புவை சென்னை அரசு மருத்துவமனை அழைத்துச் சென்ற அவரது பெற்றோர்கள் அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கழுத்தில் இருக்கும் கட்டி எந்த வகையைச் சேர்ந்தது என்பதை கண்டறிய பரிசோதனை ஒன்றை மேற்கொள்ள 18 ஆயிரம் ரூபாய் பணம் இல்லாததால், அங்கிருந்து அடையார் புற்றுநோய் மருத்துவமனைக்கும் அதனைத் தொடர்ந்து பாண்டிச்சேரி உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட வேம்பு குணமடையாதால் விரக்தி அடைந்த அவரது பெற்றோர்கள் மருத்துவ செலவிற்கோ,
வழிச் செலவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கோ பணமில்லாமல் ஒரு வழியாக வீட்டிற்கு வேம்புவை அழைத்து வந்து தங்களால் முடிந்த அளவிற்கு பராமரித்து வருகின்றனர்.

இந்நிலையில், கழுத்து பகுதியில் உள்ள பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருப்பதால் உணவு உண்ண முடியாமலும், தண்ணீர் குடிக்க முடியாமலும் தவித்து வருகிறார் வேம்பு! இதனை கவனத்தில் கொண்டு சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் தங்களால் முடிந்த பண உதவியை செய்ய வேண்டும் என்றும், வாழ வேண்டிய வயதில் உயிருக்கு போராடும் இளம்பெண்ணை உயர்தர சிகிச்சை மூலம் காப்பாற்ற தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவரது குடும்பத்தார் உள்ளிட்ட உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

S.DHANALAKSHMI
ACCOUNT NUMBER: 1777101030637
IFSC CODE: CNRB0001777
CANARA BANK
THORAMANGALAM BRANCH
PERAMBALUR DISTRICT
PIN: 621 220

G PAY NUMBER: 63799 82406

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!