Perambalur; Abhishekam to Ganesha on the occasion of Ganesha Chaturthi; Annadhanam!
பெரம்பலூர் சங்குபேட்டையில் உள்ள ஸ்ரீவெற்றி விநாயகர் கோயிலில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 23ம் ஆண்டு அன்னதானம் நடைபெற்றது. பெரம்பலூர் சங்குபேட்டை பகுதி இளைஞர்கள் ஒன்றிணைந்து அன்னதானம் வழங்கினர். திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக, விநாயகர் சதுர்தியையொட்டி, விநாயகர் சிலைக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்ட்டு அருகம்புல் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகளுடன் மஹா தீபாராதனைகளும், சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டது. இந்நிகழ்சிக்கான ஏற்பாட்டை, ஊர் பொதுமக்கள், இளைஞர்கள், முக்கியஸ்தர்கள்செய்திருந்தனர். ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் அன்னதானத்தில் கலந்து கொண்டு உணவருந்தினர்.