Perambalur: Action will be taken under the Prevention of Cruelty to Animals Act if animals are mistreated; Collector warns!
பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் வளர்ப்போர்கள் கால்நடைகளை அடையாளம் காண்பதற்கான இரும்பு கம்பிகள் மூலம் சூட்டுக்கோல் அடையாளமிடுவது,
கால்நடைகளின் கொம்புகள் சீவி விடுதல் மற்றும் கொம்புகளுக்கு ரசாயன வண்ணம் தீட்டுதல், மணல் பகுதி இல்லாத இடங்களில் கால்நடைகளை கரடு முரடான பகுதிகளில் கீழ் தள்ளுதல், ரசாயன வண்ணங்கள் கால்நடைகளின் உடல் மற்றும் பிறப்பகுதிகளில் அழகுபடுத்துவதற்காக வரைதல் மற்றும் அடையாளமிடுதல், கன்றுகள் பால்குடிப்பதை தவிர்ப்பதற்காக பசுவின் காம்புகளில் ரப்பர் அல்லது பிளாஸ்டிக் டேப் மூலம் ஒட்டுதல், வாரச்சந்தைகளில் கால்நடை மருத்துவ ஆலோசனை இல்லாமல் மருந்துகள் மற்றும் உணவு வகைகளை அதிவேகமாக கால்நடைகளுக்கு ஊற்றி குடிக்க வைப்பது ஆகியவை குற்றச்செயலாகும்.
மேலும், கால்நடைகளை பொதுமக்களின் பொழுதுபோக்கிற்காக நடனமாடுதல் மற்றும் பிற கலை நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்துவது கூடாது, கால்நடைகளை அழகுபடுத்தும் நோக்கில் கால்நடைகளுக்கு வலியை ஏற்படுத்தும் அணிகலன்களை அணியவைத்தல் கூடாது, கால்நடைகளின் வாயினை பிளாஸ்டிக் மற்றும் முகமூடி அணிவிக்ககூடாது, பால் அதிகமாக கறக்க வேண்டும் என்ற நோக்கில் ஆக்சிடோசின் மருந்து பயன்படுத்த கூடாது, கால்நடைகளுக்கு ஆண்மை நீக்கம் மருத்துவர் அல்லாத பிறரால் நடத்தப்படக் கூடாது, பிறப்பு உறுப்பில் ஏதேனும் வண்ணம் பூசுதல் மற்றும் கயிறு கொண்டு கட்டுதல் கூடாது,
கால்நடைகளின் முகத்தில் தற்காலிகமாக தீவனத்தொட்டி அமைத்தல் கூடாது, விதி 38 2(h) மற்றும் 56 பிராணிகள் வதை தடுப்பு சட்டம் 1960-ன்படி அனுமதியின்றி கால்நடைகளை சட்ட விரோதமாக வாகனங்களில் ஏற்றிச்செல்வது தண்டனைக்குரியது,
பதிவு பெற்ற இறைச்சிக்கூடம் தவிர்த்து சட்ட விரோதமாக அனுமதியின்றி பதிவு பெறாமல் இறைச்சிக்கூடம் செயல்படுவது போன்ற செயல்களில் பொதுமக்கள் மற்றும் பிராணிகள் வளர்ப்போர்கள் ஈடுபடக்கூடாது.
இக்குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது பிராணிகள் வதை தடுப்பு சட்டத்தின் படி உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.