Perambalur all schools of the district, to the possibility of passing the 100 percent: the civil Servece employee

அரசு , அரசு உதவிபெறும் மற்றும் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனைக்கூட்டம்

hm-vs-collector-meetபெரம்பலூர் மாவட்டத்தில் , நடந்து முடிந்த காலாண்டுத் தேர்வில் அரசுப்பள்ளி, அரசு உதவிபெறும் மற்றும் ஆதிதிராவிடர் நல உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் காலாண்டுத் தேர்வு முடிவுகள் குறித்தும், மாணவர;களின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்கு மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பெரம்பலூர; மாவட்டத்தை சேர்ந்த 97 அரசுப்பள்ளி, அரசு உதவிபெறும் மற்றும் ஆதிதிராவிடர் நல உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சிப் பணியாளர் க.நந்தகுமார் தலைமையில் இன்று (15.10.2016) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சிப் பணியாளர் பேசியதாவது:

நமது மாவட்டத்திலுள்ள அரசுப்பள்ளி, அரசு உதவிபெறும் மற்றும் ஆதிதிராவிடர் நல உயர்நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வித் திறனை மேற்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக இந்த கல்வியாண்டு இறுதியில் நடைபெற உள்ள அரசுப்பொதுத் தேர்வில் பங்கேற்க உள்ள பத்து மற்றும் பன்னிரென்டாம் வகுப்பில் பயிலும் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விகிதத்தில் முக்கிய கவனம் மேற்கொள்ள வேண்டும்.
ஊகநடைபெற்று முடிந்த காலாண்டு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்த மாணவ, மாணவிகளுக்கு அரசுப் பொதுத் தேர்வில் வெற்றிப் பெற தேவையான பயிற்சியையும், தன்னமிக்கையையும் மாணவ, மாணவிகளிடத்தில் தலைமை ஆசிரியர்கள் ஏற்ப்படுத்திட வேண்டும்.

மேலும், இனிவரும் காலங்களில் நடைபெறும் தேர்வுகளில் அனைத்துப் பள்ளிகளிலும், அனைத்துப் பாடங்களிலும் மாணவ-மாணவிகள் 100 சதவீத தேர்ச்சி பெறும் நிலையை எய்திடும் வகையில் ஒவ்வொரு ஆசிரியரும் பணியாற்ற, தலைமைஆசிரியர் ஆசிரியர்களை ஊக்கப்படுத்த வேண்டும், என பேசினார்.

அதனை தொடர;ந்து, நடைபெற்று முடிந்த காலாண்டு பொதுதேர்வில் அரசு மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த பன்னிரெண்டாம் வகுப்பில் 1,000 க்கும் மேல் மதிப்பெண் பெற்ற 20 மாணவ, மாணவிகளுக்கும், பள்ளிகளிகளில் முதலிடம் பெற்ற 27 மாணவ, மாணவிகளுக்கும் என மொத்தம் 47 மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சிவராமன் நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் க.முனுசாமி, ஆதிதிராவிடர் நல அலுவலர் ராஜேந்திரன், மாவட்ட கல்வி அலுவலர் வெங்கடாஜலபதி, முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் பிரேம்குமார், மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!