Perambalur: Almighty Vidyalaya Public School’s 10th annual sports festival; Police DSP inaugurated it!

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் உள்ள ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளியின், பத்தாம் ஆண்டு விளையாட்டு விழா சேர்மன் முனைவர். ஆ. ராம்குமார் தலைமையில் நடந்தது. பெரம்பலூர் போலீஸ் டி.எஸ்.பி. ஆரோக்கியராஜ் மாணவர்களின் அணிவகுப்பை ஏற்று , விழாவினை தொடங்கி வைத்து சிறப்புரை நிகழ்த்தினார். உலக அளவிலான ஜூனியர் பவர் லிப்டர் ராஜேஸ்வரியும், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகள் வழங்கி சிறப்புரையும் ஆற்றினார்.

மாணவர்களின் பல்வேறு உடல் திறன் பயிற்சியும் ,100 மீட்டர் ஓட்டம், 4 x 100 மீட்டர் தொடர் ஓட்டம், தடைகள் தாண்டி ஓட்டம் , போன்ற பல்வேறு போட்டிகளும், டேக் வாண்டோ, கராத்தே சிலம்பம், போன்ற பல்வேறு கலைகளும் மாணவர்கள் நடத்தினர். துணை சேர்மன் மோகனசுந்தரம், செயலாளர் சிவகுமார் மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!