Perambalur: Ambedkar, Karunanidhi Birth Anniversary Speech Competitions; Collector Information!
தமிழ் வளர்ச்சித் துறையின் 2024-25 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி நடத்தி பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்க அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது.
பெரம்பலூர் மாவட்டத்தில் அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி 30.07.2024 அன்றும், கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி 31.07.2024 அன்றும் பேச்சுப் போட்டிகள் பெரம்பலூர் பாரத சாரண, சாரணியர் பயிற்சி மையம் (தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி அருகில்) முற்பகல் 10.00 மணிக்கு பள்ளி மாணவர்களுக்கும், பிற்பகல் 02.00 மணிக்கு கல்லூரி மாணவர்களுக்கானப் பேச்சுப்போட்டியும் நடைபெறவுள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.5000/-, இரண்டாம் பரிசாக ரூ.3000/-, மூன்றாம் பரிசாக ரூ.2000/- மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப் பெறும். மேலும் அரசுப் பள்ளி மாணவர்கள் இருவருக்கு சிறப்புப் பரிசுத் தொகை ரு.2000/- வழங்கப்பெறும். முதன்மைக் கல்வி அலுவலரால் பரிந்துரைக்கப்படும் மாணவர்கள் மட்டுமே போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
பரிந்துரைக் கடிதம் இல்லாமல் வரும் மாணவர்கள் போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள். சென்ற ஆண்டு நடைபெற்ற அம்பேத்கர், கருணாநிதி பிறந்தநாள் பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்ற மாணவர்கள் இந்த ஆண்டு நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள இயலாது, என தெரிவித்துள்ளார்.