Perambalur: Another truck collides with a punctured truck; Another lorry driver killed!
பெரம்பலூர் இன்று அதிகாலை ஏற்பட்ட விபத்தில், டிரைவர் ஒருவர் பலியானர்.
திருச்சியில் இருந்து கடலூர் மாவட்டம், விருத்தாசலத்திற்கு ரெகுலர் சர்வீஸ் லாரி TN 88 K 3561 திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்தது. அந்த லாரியை தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே உள்ள நடுக்காவிரியை சேர்ந்த, வீராசாமி மகன் மோகன் (53) என்பவர் ஓட்டி வந்தார். லாரி அயன்பேரையூர் பிரிவு சாலை அருகே சென்ற போது, லாரியின் டயர் பஞ்சரானது.
அப்போது அதே வழியாக அதே லாரி கம்பனியை சேர்ந்த மற்றொரு TN 60 W 5173 லாரி திருச்சியில் இருந்து கடலூர் மாவட்டம் திட்டக்குடிக்கு சென்றது. அதனை, திட்டக்குடி அருகே உள்ள தி.எலமங்கலம் கிராமத்தை சேர்ந்த ராசு மகன் பச்சமுத்து (50) என்பவர் ஓட்டி வந்தார். தனது LRK கம்பனியை சேர்ந்த லாரி பிரேக் டவுன் ஆகி நிற்பதை அறிந்து, பஞ்சரான லாரியின் டிரைவர் மோகனுக்கு உதவும் சாலையில் நின்றுக் கொண்டு லைட் அடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது அதே வழியல் திருச்சியில் இருந்து வடலூருக்கு சென்ற அதே கம்பனியின் மற்றொரு TN 57 T 1310 லாரியை விருத்தாசலம் அருகே உள்ள வடுகானந்தத்தை சேர்ந்த தனபால் மகன் சபரிநாதன் (36) என்பவர் ஓட்டி வந்த லாரி பச்சமுத்து மீது மோதியது. இந்த விபத்தில் பச்சமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த மங்களமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பச்சமுத்துவின் சடலத்தை மீட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்த போலீசார் சபரிநாதனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.