Perambalur: Anti Poverty Day Observance and Legal Aid Awareness Camp!
பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் அனுக்கூர் பஞ்சாயத்து சமுதாய கூடத்தில் வறுமை எதிர்ப்பு தினம் அனுசரிப்பு மற்றும் சட்ட உதவி & சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
வேப்பந்தட்டை வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும், மாவட்ட உரிமையியல் நீதிபதி மற்றும் குற்றவியல் நீதிபதி நடுவரும்மான செ.பர்வதராஜ் ஆறுமுகம் பேசியதாவது: மக்களிடையே உள்ள வறுமைகளை ஒழிப்பதற்கும் அவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை அழிப்பதற்கும் வட்ட சட்டப்பணிகள் குழு எப்போதும் துணையாக இருக்கும் என்றும், ஏழை, எளிய மக்கள் சட்டங்களை தெரிந்து கொள்வதற்கு சட்டப்பணிகள் குழு தங்களை நாடி வந்துள்ளது. பொதுமக்கள் நீதிமன்றம் மூலம் வழக்குகளை தாக்கல் செய்வதற்கும், வழக்கறிஞர்களை வைத்து வாதாட வசதி இல்லாதவர்களுக்கு நீதிமன்றம் செல்லாமல் சட்டப்பணிகள் குழு மூலமாகவே செலவு இல்லாமல் தங்களது குறைகளை மனுக்களாக அதற்குரிய ஆவணங்களுடன் சட்டப்பணிகள் குழுவினை நாடினால் உடனடியாக தீர்வு காணப்படும் என தெரிவித்தார்.
வழக்கறிஞர்கள் வேல்முருகன், திருஞானம் ஆகியோர் சட்டப்பணிகள் குழுவின் பணிகளை தெரிவித்ததோடு, சட்டப்பணிகள் குழுவிற்கு வரமுடியதாவர்கள் கட்டணமில்லா தொலைபேசி எண் 15100 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம் என்றும் தெரிவித்தனர்.
ஊராட்சி மன்ற தலைவர் முதலி வரவேற்றார். மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவின் முதுநிலை நிர்வாக உதவியாளர் கலைவாணன் நன்றி கூறினார்.