Perambalur: Apply for Dr. Ambedkar Award of Tamil Nadu Government; Collector Information!
ஆதிதிராவிடர் நலத்துறையில் சார்பில், 2024-2025-ஆம் ஆண்டில் பட்டியலின முன்னேற்றத்திற்கு அரிய தொண்டு செய்பவருக்கு ஆண்டுதோறும் ” டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது“ ஜனவரி மாதம் 2025-ஆம் ஆண்டில் திருவள்ளளுவர் திருநாள் தினத்தன்று வழங்கப்பட உள்ளது. எனவே, பட்டியலின முன்னேற்றத்திற்கு அரிய தொண்டு புரிந்து தமிழ் வளர்ச்சிக்கு பாடுப்பட்ட தமிழறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர்களில் தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு தகுதியான நபர்கள் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்திற்குள் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களுடன் 29.11.2024-க்குள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி பயனடையுமாறு கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.