Perambalur : Arrest warrant for tahsildar; Consumer Court order!

பெரம்பலூர் அருகே உள்ள விளாமுத்தூரைச்சேர்ந்தவர் துரைராஜ் (72). வழக்கறிஞராக உள்ளார். . இவரது குடும்பத்திற்கு சொந்தமான பூர்வீக நிலம் ஏக்கர் 46 சென்ட்  மருதை ஆற்றங்கரையில் உள்ளது. இதில் மருதையாற்றின் கரையை பலப்படுத்துவதற்காக 14 சென்ட் நிலத்தை பொதுப் பணித்துறைக்கு கொடுத்தது போக, 

மீதமுள்ள 2 ஏக்கர் 32 சென்ட் தரிசு நிலத்தை துரைராஜுவும், அவரது சகோதரர் மணியும் சரிசமமாக பங்கிட்டு கொண்டனர்.

ஆனால் துரைராஜீவின் பட்டா, சிட்டா, அடங்கல் மற்றும் வரைபடத்தில் ஒரு ஏக்கர் மட்டுமே காண்பித்தது. அவருக்கு சேரவேண்டிய 16 சென்ட் நிலம் வரவில்லை. மணிக்கு பாகப்பிரிவினை செய்யப்பட்ட நிலத்தில் 16 சென்ட் நிலப்பரப்பு கூடுதலாக பதிவு செய்யப்பட்டிருந்தது.
இதில் பாதிக்கப்பட்ட துரைராஜ், பெரம்பலூர் தாசில்தாராக அப்போது பணியில் இருந்து கிருஷ்ணராஜூவிடம் இதுகுறித்து மனு அளித்தார். அந்த மனுவில் வருவாய்த் துறையினர் உரிய விசாரணை நடத்தி, நிலத்தை அளவீடு செய்து தன்னுடைய பட்டா, சிட்டா,உள்ளிட்ட ஆவணங்களில் 16 சென்ட் நிலத்தை பதிவேற்றம் செய்து தருமாறு  விண்ணப்பித்து இருந்தார். 10 மாதங்களுக்கு மேலாகியும் உரிய விசாரணை நடத்தி தீர்வு காணாததால், அலைச்சலும், மன உளைச்சலுக்கும் ஆளான  துரைராஜ், பெரம்பலூர் தாசில்தார் மீது பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.வழக்கு விசாரணைக்கு தாசில்தார் ஆஜராகவில்லை. விசாரித்த நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையம் நீதிபதி மற்றும் உறுப்பினர்கள், மனுதாரர் துரைராஜூவிற்கு சேரவேண்டிய 16 சென்ட் நிலத்தை அவரது ஆவணங்களில் பதிவேற்றம் செய்து 45 நாட்களுக்கு புதிய ஆவணங்கள் வழங்கவேண்டும் என்று 30.10.2023 அன்று தீர்;ப்பு அளித்து இருந்தது. இந்த உத்திரவை கிருஷ்ணராஜூவை தொடர்ந்து தாசில்தாராக பணியேற்ற சரவணன் உரிய காலத்தில் ஆணையத்தின் தீர்;ப்பை அமல்படுத்தவில்லை. இதனைத் தொடர்ந்து நுகர்வோர் குறைதீர்;க்கும் ஆணையம் 21.1.2024 அன்று தாசில்தாருக்கு நோட்டீசு கொடுத்தது. அதற்கு தாசில்தார் பதிலோ,   ஆணையத்திலோ ஆஜராகவில்லை. இதனிடையே நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தின் உத்திரவை அமல்படுத்தும் மனுவை துரைராஜ் ஆணையத்தில் தாக்கல் செய்தார்.இதனை விசாரணை செய்த நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணைய நீதிபதி ஜவகர், ஆணையத்தின் உறுப்பினர்கள் திலகா,முத்துக்குமரன் ஆகியோர் பெரம்பலூர் தாசில்தார் சரவணனுக்கு பிடிவாரண்டு பிறப்பித்தனர். தாசில்தார் சரவணனை பெரம்பலூர்; போலீஸ் இன்ஸ்பெக்டர் அழைத்து வந்து ஆக.12-ந்தேதி அன்று ஆஜர்படுத்தவேண்டும். அல்லது அவரை போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்து சொந்த ஜாமீனில் விடுவித்தால், அதற்கான ஆவணத்தை ஆக.12-ந்தேதி நுகர்வோர் குறைதீர்;க்கும் ஆணையத்தில் சமர்ப்பிக்கவேண்டும் என உத்திர இட்டுள்ளனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!