Perambalur: Attempt to hack DMK panchayat leader’s husband to death with a sickle in a pre-Diwali dispute!

பெரம்பலூர் மாவட்டம், செட்டிக்குளம் ஊராட்சித் தலைவராக இருப்பவர் கலா. இவரது கணவர் தங்கராசு (43), போலீசாரின் உதவிக் கோரியதன் பேரில், பஞ்சாயத்து சார்பில் கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த தீபாவளியன்று அங்காளம்மன் கோவில் அருகே சில வாலிபர்கள் கும்பலாக சாலையை மறித்து வாகனங்கள் செல்லாத முடியாத வகையில் ஈடுபட்டனர் என கூறப்படுகிறது.

அப்போது அதே ஊரை சேர்ந்த பாலசுந்தரம் மகன் சக்திவேல் என்பவர் அந்த கும்பலிடம் வாகனங்கள் செல்ல வழிவிடுமாறு தட்டி கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த அந்த கும்பலை சேர்ந்தவர்கள் சக்திவேலை தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டனர். அக்கம்பக்கத்தினர் சக்திவேலை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

பாடாலூர் போலீசார் போலீசார் வழக்கு பதிவு செய்து செட்டிகுளம் கிராமத்தைச் 17 வயதுடைய 2 சிறுவர்கள் உள்பட 6 பேரில். 4 பேரை வேப்பந்தட்டை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி துறையூர் கிளைச் சிறையில் அடைத்தனர். இதில் முன்விரோதம் இருந்து வந்தது.

தங்கராசு

இந்நிலையில் இன்று மாலை சுமார் 7.30 மணி அளவில், ஊராட்சித் தலைவர் கலாவின் கணவர், அவருக்கு சொந்தமான வெங்காய பட்டரை அருகே செல்லையா என்பவருடன் பேசிக் கொண்டிருந்தார். அங்கு, திடீரென அரிவாளுடன் வந்த இவினாஸ் மற்றும் 17 வயதுடைய சிறுவன் இருவரும் சேர்ந்து, தங்கராசை அரிவாளாலால் வெட்டிக் கொல்ல முயற்சித்தனர். சுகாரித்த தங்கராசு கைளால் தடுத்தார். இதில், இவருடைய கைகளில் பலமாக வெட்டு விழுந்தது. 3 விரல்கள் கடும் பாதிப்பபடைந்தது. அங்கிருந்தவர்கள் கூச்சலிடேவே, கொலை செய்ய வந்த வாலிபர்கள் தப்பி ஓடி தலைமறைவாகினர். இந்த தகவலை அறிந்த அப்பகுதி மக்கள் ஆயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு, செட்டிக்குளம் கிராமத்தில் சுமார் 2 மணி நேரத்திற்கு  மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாடாலூர் போலீசார் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் கலைந்து போக சென்றனர்.

வெட்டுக்காயமடைந்த தங்கராசுக்கு நரம்புகள் பாதிக்கப்பட்டுள்ளதால், திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்ப்பட்டுள்ளார். இச்சம்பவத்தால் செட்டிக்குளம் பகுதில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!