Perambalur: Awards for individuals and institutions that have worked exceptionally for the welfare of the differently-abled at the state level; Collector’s information!

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களைத் தேர்வுக்குழு மூலம் தேர்வு செய்து, தேர்வு செய்யப்படும் விருதாளர்களுக்கு தமிழக முதல்வர் மாநில விருது வழங்கி ஊக்குவித்து கவுரவிக்கப்படுவதால், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாற்றுத் திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணிபுரிபவர்கள், மேலும் சிறப்பாக பணிபுரிய வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் பொருட்டு, 15 ஆகஸ்ட் 2025 சுதந்திர தின விழா அன்று விருதுகள் வழங்கப்படவுள்ளன.

மேலும், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அரும்பணியாற்றிய சிறந்த கலெக்டர்களுக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கமும் ரூ.25,000/-ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் மாவட்ட ஆட்சியர் மாநாட்டில் வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனங்களுக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கமும் ரூ.50,000/-ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த மருத்துவர், மாற்றுத்திறனாளிகளுக்கு மிக அதிக அளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனம், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த சமூகப்பணியாளருக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக அளவில் கடன் வழங்கிய சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகியவற்றிற்கு 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.

இவ்விருதுகளுக்கு விண்ணப்பிக்கும் விருதாளர்கள் http://awards.tn.gov.in என்ற வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படிவத்தில் விவரங்களை பதிவு செய்தும், கோரப்பட்ட விவரங்களை இணைத்தும் 30.06.2025க்குள் விண்ணப்பிக்கலாம். வலைதளத்தில் விண்ணப்பிக்காத விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. விண்ணப்பத்தின் 2 நகல்களை 30.06.2025 அன்று பிற்பகல் 5.00 மணிக்குள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்விருதிற்க்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வுக்குழுவினரால் தெரிவு செய்யப்பட்டு தேர்வு செய்யப்படும் விருதாளர்களுக்கு, சுதந்திரதின விழா நிகழ்வில் முதலமைச்சரால் மாநில விருதுகள் வழங்கப்படும். தகுதியுள்ளவர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கிரேஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!