Perambalur: Awareness class on family welfare laws for college students! Judges attended!
பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் சார்பில் பெரம்பலூர் இராமகிருஷ்ண பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு, குடும்ப நல சட்டங்கள் குறித்தான விழிப்புணர்வு வகுப்பு தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சி. சங்கர் தலைமையில் நடந்தது. குடும்ப நல சட்டங்கள் சம்பந்தப்பட்ட பல்வேறு சட்டங்கள் அவசியத்தையும் எடுத்துரைத்தார்,
பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும் சார்பு நீதிபதியுமான பி.மகேந்திரா வர்மா மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயல்பாடுகள் குறித்தும், குடும்ப நல சட்டங்கள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். கல்லூரியின் முதல்வர் எம். மாரிமுத்து வரவேற்றார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் முதுநிலை நிர்வாக உதவியாளர் கே கலைவாணன் நன்றி கூறினார்.