Perambalur: Awareness rally against tobacco and drugs in Siruvachur!
பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூரில், மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம், ஆல்மைட்டி பள்ளி இணைந்து புகையிலை மற்றும் போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வுபேரணி ஊராட்சித் தலைவர் ராஜேந்திரன் முன்னிலையில் நடந்தது.
புகையிலை மற்றும் போதை பொருட்கள் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து பேரணியில் மாணவர்கள் கோசமிட்டவாறு சென்றனர். பேரணி சிறுவாச்சூர் முக்கிய வீதிகள், கடைவீதி வழியாக சென்றது.
ஆல்மைட்டி வித்யாலய பப்ளிக் பள்ளி சேர்மன் ஆ.ராம்குமார், பெரம்பலூர் மருத்துவர் வனிதா, சுகாதார கல்வியாளர் சீனிவாசன், சுகாதார ஆய்வாளர் அசோக்குமார் மற்றும் சுமார் 200 க்கும் மேற்பட்ட ஆல்மைட்டி வித்யாலய பப்ளிக் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.