Perambalur: Banned lottery ticket seller arrested! Police Action!!

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின் படி குன்னம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சரவணகுமார் மற்றும் அவரது குழுவினர் சோதனையிட்டபோது ரெட்டிக்குடிக்காடு வெள்ளாறு கரை அரச மரத்தடியில் அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் கேரளா லாட்டரி சீட்டுகளை விற்றுக் கொண்டிருந்தவரை கையும் களவுமாக பிடித்து, அவரிடம் நடத்திய விசாரணையில், அவர், கீழப்பெரம்பலூரை சேர்ந்த, முத்துக்கருப்பன் மகன் பரமசிவம் (39) என தெரிய வந்தது. அவரிடமிருந்து ரூபாய் 1400 பணமும் மற்றும் கேரள ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்ய பயன்படுத்திய செல்போன் ஒன்றும் பறிமுதல் செய்தனர்.

வழக்கு பதிவு செய்த குன்னம் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜப்படுத்தி, சிறைக்கு அனுப்பி வைத்தனர்.

அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். அத்தகைய செயல்களை பெரம்பலூர் மாவட்டத்தில் புரிவோர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை் எடுக்கப்படும் என பெரம்பலூர் போலீஸ் எஸ்.பி ஆதர்ஷ் பசேரா தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!