Perambalur: Bike accident; one young man killed, another undergoing intensive treatment.

Karthikeayan
பெரம்பலூர் மாவட்டம், செட்டிகுளம் அருகே உள்ள பொம்மனப்பாடி கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் மகன் கார்த்திகேயன் (36). திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள வாழையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன் மகன் சுந்தர்ராஜ் (38). உறவினர்களான இவர்கள் நேற்றிரவு இவர்கள், செட்டிகுளத்தில் இருந்து பொம்மனப்பாடிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர். பைக்கை சுந்தர்ராஜ் ஓட்டினார். பொம்மனப்பாடி அருகேயுள்ள பெட்ரோல் பங் அருகே வந்தபோது பைக் விபத்துக்குள்ளானது. இதில் இருவரும் தலையில் அடிப்பட்டு உயிருக்காக போராடியதால் அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் கார்த்திகேயன் சிகிச்சையின் போது பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பாடாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497