Perambalur: Electricity Board engineer arrested for accepting a bribe to provide an electricity connection to a house!

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், காடூரை சேர்ந்தவர் வேலாயுதம் மகன் பழனிவேல் (31). இவர் புதிதாக வீடு கட்டுவதற்கு தற்காலிக மின் இணைப்பு கோரி துங்கபுரம் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். அங்கு உதவி மின் பொறியாளராக பணிபுரிந்து வந்த பெரம்பலூரை சேர்ந்த வல்லாளி மகன் ரகுராமன் (54) என்பவர் புதிய இணைப்பு வழங்க ரூ. 2 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். அதை கொடுக்க மனமில்லாத பழனிவேல் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு பெரம்பலூர் டி.எஸ்.பி ஹேமசித்ரா தலைமையிலான போலீசார் ரசயானம் தடவிய ரூபாய் நோட்டுக்களை பழனிவேலிடம் கொடுத்து அனுப்பி வைத்தனர். இன்று மதியம் 12.30 மணி அளவில் பழனிவேலிடம் இருந்து ரூ. 2 ஆயிரத்தை லஞ்சமாக ரகுராமன் பெற்ற போது மறைந்திருந்த போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர், வழக்குப் பதிவு செய்த போலீசார் இது குறித்து பொறியாளரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக பேசப்பபட்டது.










kaalaimalar2@gmail.com |
9003770497