Perambalur: Financial assistance for persons with disabilities to set up Aavin milk product sales outlets; Collector’s announcement!

தமிழக அரசால் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தி பொருட்கள் விற்பனை மையம் அமைக்க நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 18 வயது முதல் 45 வயது வரை உள்ள இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இது நாள் வரை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தி பொருட்கள் விற்பனை மையம் அமைக்க நிதி உதவி பெறாதவராக இருக்க வேண்டும். எனவே, தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் தங்களது மாற்றுத்திறனாளி அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், கல்வி மாற்றுச்சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-2 ஆகியவற்றுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், பெரம்பலூர் என்ற முகவரியில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ 30.09.2026 தேதிக்குள் விண்ணப்பித்து பயன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண் : 04328 – 225474 தொடர்பு கொண்டு பயன் பெறுமாறு கலெக்டர் ஷரண்யா விடுத்துள்ள தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!