Perambalur: Thanks to VCK party members who made the Ulundurpet conference a success! Statement by District Secretary Krishnakumar!!

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி விசிக மாவட்ட செயலாளர் ந.கிருஷ்ணகுமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வரலாறு காணாத மாநாட்டில் கலந்து கொண்ட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை பொறுப்பாளர்கள் அனைவருக்கும் உளப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வரலாற்றின் பொன்னெழுத்துக்களால் பொறிக்க பட வேண்டிய வரலாற்று சிறப்புமிக்க மாநாட்டில் கட்டுக்கடங்காத கூட்டத்தை கூட்டிக் காட்டிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றியும், காலத்தால் போற்றப்பட வேண்டிய.. பாதுகாக்கப்பட வேண்டிய நமது தலைவரின் கொள்கை கோட்பாடுகளை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு சிறுத்தைகள் ஆகிய நாம் அனைவரின் கடமையாகும். மாநாட்டில் கலந்து கொண்டு பாதுகாப்பாக திரும்பிய அனைத்து நிலை பொறுப்பாளர்களுக்கும்.. நிர்வாகிகளுக்கும். மகளிர் தொண்டர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என அதில் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!