Perambalur: Private sector job fair; Collector’s announcement!

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையம் மற்றும் தமிழ்நாடு ஊரக / நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர்திட்டம்) இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 22.08.2026 அன்று ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் காலை 08.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை நடைபெற உள்ளது.

இவ்வேலைவாய்ப்பு முகாமில் பெரம்பலூர் ,சென்னை, காஞ்சிபுரம், ஓசூர், கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை, திருச்சி, அரியலூர் மற்றும் திண்டுக்கல் பகுதிகளில் அமைந்துள்ள 150க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு 20,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு 8-ஆம் வகுப்பு முதல் பட்டபடிப்பு வரை, ஐடிஐ, டிப்ளமோ, பி.இ / பி.டெக், பார்மசி, ஒட்டுநர் மற்றும் ஆசிரியர் கல்வித் தகுதியுடையோர்களை தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யவுள்ளனர்.

மேலும் தொழில் பழகுநர், குறுகிய கால திறன் பயிற்சிக்கு வழிகாட்டுதல், சுயதொழில் மற்றும் கடன் உதவி தொடர்பான ஆலோசனைகள் மற்றும் தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு நிறுவனத்தின் பதிவு வழிகாட்டுதல்களும் வழங்கப்பட உள்ளது. இதில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள வேலைநாடுநர்கள் ஆதார் எண், பயோடேட்டா, கல்விச்சான்று நகல்களுடன் முகாமில் கலந்துகொள்ளலாம். இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்வதற்கு அனுமதி இலவசம்.

இதில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் http://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் Candidate Login–ல் தங்களது விவரங்கள் பதிவு செய்து பணி வாய்ப்பினை பெறலாம். இவ்வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களின் வேலைவாய்ப்பு பதிவு இரத்து செய்யப்படமாட்டாது. வேலைநாடுநர்கள் வேலையளிக்கும் நிறுவனங்களுக்கு எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. மேலும் விவரங்களுக்கு 04328-296352 மற்றும் 94990 55913 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்புகொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் ஷரண்யா தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!