Perambalur: Resolution passed during the VCK’s ‘Journey in Search of Roots’ (Vergalai Thedi Payanam) demanding the recovery of government land encroached upon by a private crusher unit.

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேர்களை தேடி பயணம் செங்குணம் கிராமத்தில் மாவட்ட செயலாளர் ந.கிருஷ்ணகுமார் தலைமையில் நடந்தது. ஒன்றிய செயலாளர் மாஸ்மணி முன்னிலை வகித்தார். கூட்டத்தில், குங்குமாயி கிரஷர் உள்ள பகுதியில் அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்துள்ளதை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், செங்குணம் கைகாட்டியில் அதிக விபத்து நடப்பதால் மேம்பாலம் அமைக்க கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பபட்டன. மாவட்டபொருளாளர் ர.பிச்சைப்பிள்ளை கருத்துரை வழங்கினார். மாநிலதுணைசெயலாளர் அ.பழனிவேல் ராஜா, சமூக ஊடகமைய மாவட்ட அமைப்பாளர் சு.பாலன், மாவட்ட அமைப்பாளர் மகாதேவன், ஒன்றியதுணைசெயலாளர்கள் சி.ராஜேந்திரன், சி.ரமேஷ், செயலாளர். அருண் மற்றும் ஊர் பொதுமக்கள் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497