Perambalur: Accident as bike crashes into warning sign; 2 youths killed!

பெரம்பலூர் மாவட்டம், பேரளி அருகே இன்று மாலை சுமார் 3.50 மணி அளவில் அரியலூர் – பெரம்பலூர் சாலையில், பேரளியில் இருந்து கவுல்பாளையம் கிராமத்திற்கு சென்ற வாலிபர்கள் சாலை ஓர எச்சரிக்கை பலகையில் மோதி விபத்திற்குள்ளாகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

பெரம்பலூர் அருகே உள்ள கவுல்பாளையம் கலை நகரை சேர்ந்த ராஜ் மகன் நந்தகுமார் (23), அதே ஊரைச் சேர்ந்த ரமேஷ் மகன் சுரேஷ் (22) ஆகிய இருவரும் பேரளியில் இருந்து சொந்த ஊருக்கு பைக்கில் திரும்ப வந்துக் கொண்டிருந்தனர். பைக்கை சுரேஷ் ஓட்டி உள்ளார். அப்போது பேரளி அருகே சாலையின் ஓரத்தில் உள்ள விளம்பர பலகையில் மோதி விபத்து ஏற்பட்டதில் நந்தகுமார் சம்பவ இடத்திலேயே பலியானர். ரத்தக் காயங்களுடன் மீட்கப்பட்ட சுரேசுக்கு ஒரு கை துண்டானது. பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த மருவத்தூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!