Perambalur: Bike-car head-on collision; The old man died! The teenager was injured!!
பெரம்பலூர் அருகே பைக்கும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார், வாலிபர் ஒருவர் காயமடைந்தார்.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள மூவானூர் மண்பாறை பகுதியை சேர்ந்த குர்புதீன் (60), மற்றும், திருப்பட்டூரை சேர்ந்த ஈசாக் முஹமது (34), இவரது மனைவி பவுஜியாபேகம் (30), ஆகிய மூவரும் பெரம்பலூர் வடக்குமாதவி சாலையில் உள்ள உறவினரின் திருமணத்தில் கலந்து கொள்ள காரில் வந்து கொண்டு இருந்தனர். கார், கோனேரிபாளையம் – தண்ணீர்பந்தல் சுற்றுச் சாலையைில் வடக்கு மாதவி பிரிவு சாலை அருகே சென்ற போது எதிரே கோனேரிப்பாளையத்தை சேர்ந்த ரெங்கநாதன் மகன் தினேஷ் (27), என்பவர் ஓட்டி வந்த பைக்கும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. இதில் காரில் பயணித்த குர்புதீன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தினேஷ் படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.