Perambalur: Mysterious men snatched a 9 pound chain from a walking woman!
பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட துறைமங்கலம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் ராமன் மனைவி கமலவேணி (60).
இவர் இன்று மாலை சுமார் 6.15 மணி அளவில் பக்கத்து தெருவிற்கு நடந்து சென்றார். அப்போது, அங்கு பல்சல் பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் கமலவேணி அணிந்திருந்த சுமார் 9 பவுன் தங்கத்தாலான தாலிச்செயினை, பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் மாயமாய் மறைந்தனர்.
இது தொடர்பாக பெரம்பலூர் போலீசாருக்கு கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்த தொடு, அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான கேமரா காட்சிகளை வைத்தும் கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று மாலை அப்பகுதி பெண்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.
விளம்பரம்: