Perambalur: BJP leader’s car glass, house window broken by miscreants; Police investigation!
பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறை நோவா நகரில் வசித்து வருபவர் பாரதிய ஜனதா கட்சியின் மாநில பட்டியல் அணி தலைவர் தடா பெரியசாமி. இவரது, வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இன்னோவா காரை அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கல்லாலும் கட்டையாலும் நேற்று இரவு 10:30 மணி அளவில் தாக்கி சேதப்படுத்தினர்.
காரின் இடது பக்கம் உள்ள முன்பக்கம் மற்றும் பின்பக்க டயர்களை கத்தியால் கிழித்து சேதப்படுத்தி உள்ளனர். தொடர்ந்து வீட்டில் ஜன்னல் கண்ணாடிகளையும் உடைக்கப்பட்டது.
சம்பவத்தில் தடா பெரிய சாமியின் பேரன் அதிரந்தன் (வயது 4) என்பவருக்கு வலது காலில் காயம் ஏற்பட்டதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர், வீடு திரும்பினர் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. இது வழக்கு பதிவு செய்த மங்களமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.