Perambalur: BJP members who tried to go to Madurai rally despite ban placed under house arrest!
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதி வேண்டியும், திமுகவைக் கண்டித்தும், தமிழக பிஜேபி மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் வானதி சீனிவாசன் எம்எல்ஏ தலைமையில், இன்று மதுரையில் இருந்து சென்னைக்கு மகளிர் பேரணியில் நடத்துவதாக அறிவித்திருந்தனர். இதை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுக்கும் பொருட்டு போலீஸ் அதிகாரிகள், பிஜேபி மாவட்டத் தலைவர் வி.பி.செல்வராஜ், ஸ்டார்ட்-அப் பிரிவு மாநிலச் செயலாளர் உமா ஹைமவதி, மாவட்டச் செயலாளர் பானுமதி மகளிரணி மாவட்டத் தலைவர் சாந்திஸ்ரீ ஆகியோரை இன்று அதிகாலை வீட்டுக் காவலில் எடுத்தது போலீஸ். இதனால் பெரம்பலூர் அரசியல் வட்டாரத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.